Kollywood Kisu Kisu - Gossip of the day

http://cunardqueens.files.wordpress.com/2009/09/image-film-roll.jpg
படப்பிடிப்புகளில் கல்லூரி நடிகை பண்ணுற அளப்பற தாங்க முடியலையாம்... தாங்க முடியலையாம்... காஸ்ட்யூம் டிசைனர் டிரஸ் செலக்ட் பண்ணி கொடுத்தால் Ôஇது நல்லாவே இல்ல. வேறு டிசைன் வேணும், வேறு கலர் வேணும்Õனு அடம்பிடிக்கிறாராம்... அடம்பிடிக்கிறாராம்... டிசைனர், டைரக்டர், கேமராமேன் ஓகே சொன்ன டிரஸ்சுன்னு சொன்னாலும் Ôஎன்னோட உடம்புக்கு எந்த டிரஸ் நல்லா இருக்கும்னு எனக்குத்தான் தெரியும்Õனு சொல்றாராம்... சொல்றாராம்... இதனால தயாரிப்புங்க நடிகை மேல கோபமா இருக்கிறாங்களாம்... இருக்கிறாங்களாம்...

குண்டு கவர்ச்சி நடிகையோட திருமணம் தள்ளிப்போகுதாம்... தள்ளிப்போகுதாம்... கல்யாணத் துக்கு வர்றதா சொன்ன அரசியல் புள்ளி ஒருத்தரு, தேதி கொடுக்கமா இழுத்தடிக்கிறாராம்... இழுத்தடிக்கிறாராம்... பேமிலியிலேயும் முழு சம்மதம் கொடுக்காமல் தவிக்க விடுறாங்களாம்... தவிக்க
விடுறாங்களாம்... வெறுத்துப்போன கவர்ச்சி, கல்யாணம் நடக்கும்போது நடக்கட்டும்னு நடிக்க போயிட்டிருக்காராம்... நடிக்க போயிட்டிருக்காராம்...

தம்பி ஊருக்கு போயி சரியா சேராததால காதல் நடிகர் ரொம்பவே அப்செட்டாம்... அப்செட்டாம்... இனிமே மத்தவங்க பேச்சை கேக்காம தானே நேரா கதைகேட்டு ஓகே பண்றதுன்னு முடிவு பண்ணியிருக்காராம்...
பண்ணியிருக்காராம்... கொஞ்ச நாளைக்கு ஆக்ஷனையும் பஞ்ச் டயலாக்கையும் ஒதுக்கி வைக்கவும் தீர்மானிச்சிருக்காராம்...
தீர்மானிச்சிருக்காராம்...

Comments

Most Recent