Kollywood Kisu Kisu - Gossip of the day

http://cunardqueens.files.wordpress.com/2009/09/image-film-roll.jpg
ஒவ்வொரு நடிகருக்கும் சம்பளம் எவ்வளவு, அவர்களின் மார்க்கெட் நிலவரம் என்ன, ரசிகர்களின் பலம் என்னங்கிறது பத்தி ஆக்டர் சங்கம் சீக்ரெட்டா கணக்கு எடுக்குதாம்... எடுக்குதாம்... எதுக்கு இந்த சர்வேனு விசாரிச்சா, நடிகர்கள் சம்பளத்துக்கு வேட்டு வைக்கத்தான் இந்த நடவடிக்கைனு கோடம்பாக்கம் பட்சி சொல்லுது... சொல்லுது...

கையில பெருசா படம் இல்ல. வெளியாகுற படத்துல எல்லாம் பிரச்னை. அன்பா வளர்த்த நாய்க்குட்டி அவுட்டு. இதனால மனம் வெறுத்துப்போன நமீ நடிகை, குல தெய்வத்துக்கு பொங்க வச்சு, கோபத்தை தணிக்க சொந்த ஊருக்கு போயிருக்காராம்... போயிருக்காராம்...

ஹீரோயின் கனவை கைவிட்ட கிரேன் நடிகை ஒத்தப்பாட்டுக்கு ஆடியே கல்லாகட்ட முடிவு பண்ணியிருக்காராம்... பண்ணியிருக்காராம்... இதுக்குனு தனி மேனேஜரையே வச்சிருக்காராம்... வேலைக்கு  வச்சிருக்காராம்...

நாள் கணக்கு பார்த்து சம்பளம் கேக்குறதில்லை யாம். டான்ஸ் மூவ்மென்ட்ஸ், காஸ்டியூமை கணக்கு பார்த்துதான்  சம்பளம் கேக்குறாராம்... மேனேஜரு கேக்குறாராம்...

இன்னிக்கு இவ்ளோதான்.

Comments

Most Recent