Mahesh Bhatt to direct Tamil film

http://im.rediff.com/movies/2006/nov/21poster1.jpg
பிரபல இந்திப்பட தயா‌ரிப்பாளரும் இயக்குனருமான மகேஷ்பட் விரைவில் தமிழ்ப் படம் இயக்குகிறார். ஹீரோவாக நடிக்க அவர் தேர்வு செய்திருப்பது கணேஷ் வெங்கட்ராமன்.

மகேஷ்பட்டின் ஏஎஸ்ஏ புரொட‌க்சன் அண்ட் எ‌ண்டர்பிரைசஸ் மறைந்த இயக்குனர் ‌‌ஜீவாவின் மனைவி அனிஸுடன் சேர்ந்து முத்திரைப் படத்தை தயா‌ரித்தது. படம் ச‌ரியாகப் போகவில்லையென்றாலும் தமிழ் சினிமா மீதான மகேஷ்பட்டின் நம்பிக்கை குறையவில்லை.

தனது புதிய படமான ஷாபிட்டை சாபம் என்ற பெய‌ரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறார் மகேஷ்பட். சென்ற வாரம் ஷாபிட் இந்தியில் வெளியான அதேநாள் சாபம் தமிழில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

விரைவில் இந்தி, தமிழ் இருமொழிகளில் ஒரு படத்தை மகேஷ்பட் இயக்குகிறார். இதில் நடிக்க கணேஷ் வெங்கட்ராமனை அவர் தேர்வு செய்துள்ளார். இன்னும் சில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Comments

Most Recent