MGR 25 Years on Cine Industry - Report on ZEE Tamil

திரையுலகில் எம்.ஜி.ஆர். சந்தித்த பிரச்னைகள்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQgRjNMiK9p7ESmVprys2giKrtE9zq1631FEynCNabJvMoGWkXOjhL_PtYetpVVwmmWYRToBWg2Z9AOmb4TLkWnaesCkVVeNGMPpN-JWoVrXUB_PyHxk6USDTehHsMHsdWbTHakwMRJjE/s400/mgr_jaya.jpg
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகாலத்துக்கும் மேலாக நீடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நட்சத்திர நாயகன் எம்.ஜி.ஆர். தனது படங்களில் தான் சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றால் அதை பார்த்து ரசிகர்கள் கெட்டு விடுவார்கள் எனக் கருதி, அதுபோன்ற காட்சிகளை தவிர்த்து ரசிகர்கள் நலனில் அக்கறையுடன் சினிமா வாழ்க்கையை நகர்த்திய அவர், அரசியலிலும் கால் பதித்து வெற்றிகளை குவித்தார். எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை, புதுப்பொலிவுடன் தொகுத்து `நாயகன்' என்ற பெயரில் வழங்கி வருகிறது, ஜீ தமிழ் தொலைக்காட்சி.

வியாழன் தோறும் இரவு 9.30 மணிக்கு ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, மக்கள் திலகமாக நடிப்பை தொடர்ந்து, அரசியல் தலைவராக மக்களிடம் நிலைத்த எம்.ஜி.ஆரின் வரலாறு பற்றியது. சதிலீலாவதி படத்தின் மூலம் தனது திரையுலகப் பயணத்தை தொடங்கிய எம்.ஜி.ஆர். அதை தொடர்ந்து சந்தித்த பிரச்னைகளை எப்படி எதிர்கொண்டார்? அடுத்த படத்திற்கான வாய்ப்புகள் எப்படி கிடைத்தன? எந்த திரைப் படத்தில் புகழ் பெற்றார்? எந்தெந்த படங்கள் வெற்றி ‌பெற்றன? போன்ற பல சுவாரசிய தகவல்களை தொகுத்து வழங்குகிறது இந்த நிகழ்ச்சி. ஆரம்ப காலங்களில் எம்.ஜி.ஆர்., நடித்த படங்களின் அபூர்வ ஸ்டில்களும் நிகழ்ச்சியில் இடம்பெறுவது ஹைலைட்.

Comments

Most Recent