‘துரோகி’ படத்தில் கெட்அப் மாற்றி நடிக்கிறேன் என்றார் ஸ்ரீகாந்த். இது பற்றி அவர் கூறியதாவது: வடசென்னை பகுதி இளைஞனாக ‘துரோகி’யில் நடிக்கிறே...
‘துரோகி’ படத்தில் கெட்அப் மாற்றி நடிக்கிறேன் என்றார் ஸ்ரீகாந்த். இது பற்றி அவர் கூறியதாவது: வடசென்னை பகுதி இளைஞனாக ‘துரோகி’யில் நடிக்கிறேன். இதில் எனது கெட்அப்பை மாற்றி நடித்துள்ளேன். இதன் படப்பிடிப்பு சேமியாஆலை ஒன்றில் நடந்தது. நானும், நாயகி பூர்ணாவும் உயரமான இடத்திலிருந்து விழுவதுபோல் காட்சி அமைக்கப்பட்டது. இதற்காக இருவர் முதுகிலும் கயிறு கட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் பூர்ணா கட்டியிருந்த கயிறு அறுந்ததுபோல் தெரியவே அவரை தாங்கிப்பிடித்தேன்.
நிஜத்தில் எனக்கு கட்டியிருந்த கயிறுதான் அறுந்திருந்தது. 3 மாடி உயரத்திலிருந்து தவறி கீழே விழுந்தேன். சேமியா தயாரிப்பதற்காக அங்கு கோதுமை கொட்டி இருந்தார்கள். அதன் மீது விழுந்ததால் கையில் மட்டும் லேசான காயத்துடன் தப்பினேன். மறுபடியும் அதேகாட்சியை படமாக்கியபோது அடிபட்ட இடத்தில் கட்டுபோட்டுக்கொண்டு நடித்தேன். பூர்ணாவும் எந்தவித பதற்றமும் இல்லாமல் நடித்தார். இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.
Comments
Post a Comment