ராஜன் மாதவ் இயக்கும் படம், ‘முரண்’. இதில் சேரன், பிரசன்னா இணைந்து நடிக்கின்றனர். இதற்குமுன் பிரசன்னா நடித்து வரும் படம் ‘பாணா’. அவர் சம்...
ராஜன் மாதவ் இயக்கும் படம், ‘முரண்’. இதில் சேரன், பிரசன்னா இணைந்து நடிக்கின்றனர். இதற்குமுன் பிரசன்னா நடித்து வரும் படம் ‘பாணா’. அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகிவிட்டன. சமீபத்தில் ‘கோவா’ படத்தில் கவுரவ வேடம் ஏற்றிருந்தார் பிரசன்னா. இதையடுத்து வேறு சில இயக்குனர்கள் கவுரவ வேடம் ஏற்க அழைத்தனர். மறுத்துவிட்ட பிரசன்னா, 'இப்போது ‘முரண்’ படத்துக்காக தயாராகி வருகிறேன். இனி எந்த படத்திலும் கவுரவ வேடம் ஏற்க மாட்டேன்' என்றார்.
Comments
Post a Comment