No plans for Hindi movies -Tamannaah

http://www.tamannaonline.com/images/tamanna_gallery_25.jpg
‘சுறா’, ‘தில்லாலங்கடி’, ‘பையா’ படங்களை முடித்துவிட்டேன். அடுத்து ஹரி இயக்கத்தில் தனுஷ் ஜோடியாகவும், ஷிவா இயக்கத்தில் கார்த்தியுடனும் நடிக்கிறேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது தவிர தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஜோடியாக, வி.வி.விநாயக் இயக்கும் ‘பத்ரிநாத்’ படத்திலும், நாக சைதன்யா ஜோடியாக, சுகுமார் இயக்கும் படத்திலும் நடிக்கிறேன். தமிழ், தெலுங்கில்தான் எனது கவனம் இருக்கிறது. இந்திக்கு போகும் எண்ணம் இப்போதைக்கு இல்லை. வருடத்துக்கு 4 முதல் 5 படங்கள்தான் என்னால் நடிக்க முடியும். அதற்கான கமிட்மென்ட்ஸ் இருக்கிறது. கமர்சியலான கதாபாத்திரங்களாக ஏற்றாலும் அதில் என்னால் முடிந்த நடிப்பை வெளியிடுகிறேன். இதை ஆரம்பம் முதலே செய்து வருகிறேன். இவ்வாறு தமன்னா கூறினார்.

Comments

Most Recent