P N Sundaram passes away, No film shooting today

பி.என்.​ சுந்தரம் மறைவு:​ இன்று படப்பிடிப்புகள் ரத்து
http://i.ytimg.com/vi/NZrhMzh0W5o/2.jpg
சென்னை,​​ மார்ச் 22: பிரபல ஒளிப்பதிவாளர் பி.என்.​ சுந்தரம் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில்,​​ செவ்வாய்க்கிழமை ஒரு நாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக இருந்து வந்த பி.என்.​ சுந்தரம்,​​ திங்கள்கிழமை மாலை காலமானார்.​ இந்தி,​​ தமிழ்,​​ தெலுங்கு,​​ மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் கடந்த 50 ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார்.​ தமிழ்,​​ மலையாள திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.​ "பெப்சி' முன்னாள் செயலாளராகவும் இருந்துள்ளார்.அவருடைய உடல் சைதாப்பேட்டை நீதிமன்றம் பின்புறம்,​​ ஸ்ரீராம் காலனியில் உள்ள அவருடைய வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.​ அவரது உடல் தகனம் பெசன்ட் நகர் மயான பூமியில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.இவரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் செவ்வாய்க்கிழமை படப்பிடிப்புகளை ரத்து செய்வதென தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமும்,​​ பெப்சியும் இணைந்து முடிவெடுத்துள்ளது.

Veteran cinematographer P N Sundaram passed away at his residence here on Monday. He was 82 and is survived by his two daughters and a son.

Staring as a camera assistant at Vijaya Vauhini studios, Sundaram went on to can a number of memorable movies starring M GR, Sivaji' Ganesan, and Jayalaithaa among others. Uyarndha Manidhan', Oli Vilakku', Kaadhalikka Neramillai', Enga Veettu Pillai', Adimai Penn', and Vietnam Veedu' were among them. He had filmed over 200 movies in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi.

Sundaram was one of the founders of the Film Employees Federation of South India (FEFSI) and the South Indian Cinematographers Association (SICA). As a mark of respect to the venerated cinematographer, all shooting schedules for Tuesday have been cancelled.

Sundaram, a resident of Saidapet, had undergone a surgery for a heart condition a few months ago and had visited his doctors for a check-up on Monday. He passed away around 4 30 pm at his residence, said SICA sources. The last rites are scheduled for Tuesday afternoon. 

Comments

Most Recent