Paiya, Kavalar Kudiyiruppu for April Release

http://no1musiq.com/wp-content/uploads/2009/12/Paiya-Movie-Stills.jpg

தயாநிதி அழகி‌ரியின் கிளவுட் நைன் பையா படத்தை வாங்கியதில் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறார் லிங்குசாமி. படத்தின் தயா‌ரிப்பாளர் என்முறையில் அவரது பாக்கெட் காப்பாற்றப்பட்டது முதல் காரணம். இரண்டாவது, படத்துக்கு கிடைக்கப் போகும் அபி‌ரிதமான விளம்பரம்.

ஏப்ரல் 2ஆம் தேதி பையா வெளியாகிறது. அதனுடன் போட்டி போட அரை டஜன் படங்கள் வெயிட்டிங்கில் இருந்தாலும் வெயிட்டான போட்டியாளர் என்று குப்பி படத்தை இயக்கிய ரமேஷின் காவலர் குடியிருப்பு படத்தை சொல்லலாம்.

பாபர் மசூதி இடிப்புக்குப் பின் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட காதல் ஜோடியின் உண்மைக் கதையிது. தமிழின் முன்னணி இயக்குனர்கள் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். காரணம் குப்பி படத்தின் மேக்கிங் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு.

காவலர் குடியிருப்பு பையா வெளியாகும் அதே ஏப்ரலில் திரைக்கு வருகிறது. புதுமுகங்கள் அனீஸ், ஸ்ருதி காவலர் குடியிருப்பில் நடித்திருப்பதாலும், ரமேஷைவிட லிங்குசாமி பாப்புலர் என்பதாலும் பையாவுக்கு பயமில்லை என்பதே இப்போதைய நிலவரம்.

Comments

Most Recent