Police enquiry on Ranjitha



நித்யானந்தா மீது கோவையில் பதிவான வழக்கு தொடர்பாக நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த கோவை போலீசார் முடிவெடுத்துள்ளனர். ‘சாமியார் நித்யானந்தாவை கைது செய்ய வேண்டும். ஆசிரமம் உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் முடக்க வேண்டும்’ என்று கோவையை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் கோவை மாநகர போலீசில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் நித்யானந்தா மீது இந்திய தண்டனை சட்டம் 295 ஏ(மத உணர்வுகளை புண்படுத்துதல்), 420(மோசடி செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உதவி கமிஷனர் செல்வராஜ் கூறுகையில், ‘நித்யானந்தா மீதான வழக்கு தொடர்பாக நித்யானந்தா & ரஞ்சிதா ஆபாச காட்சிகள் கொண்ட வீடியோவை ஆதாரமாகச் சேர்க்கவும், நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். ரஞ்சிதா இருக்குமிடம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம்’ என்றார்.
நித்யானந்தா மீது தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். பல இடங்களில் பதிவாகும் புகார்கள் தொடர்பான வழக்குகளையும் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் விசாரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

Comments

Most Recent