சினிமா தயாரிப்பாளரின் மகன் அளிக்க முன்வந்த ரூ.600 கோடி சொத்துக்களை பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாங்க மறுத்தார். பாலிவுட் பிரபல தயாரிப்...
சினிமா தயாரிப்பாளரின் மகன் அளிக்க முன்வந்த ரூ.600 கோடி சொத்துக்களை பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா வாங்க மறுத்தார். பாலிவுட் பிரபல தயாரிப்பாளர் கமால் அம்ரோகி. அவருக்கு ஷந்தர், தஸ்தார் என்ற 2 மகன்களும் ருக்சர் என்ற மகளும் உள்ளனர். ருக்சருக்கு வசீம் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், கமால் அம்ரோகியின் மகன்கள், மகள், பேரன் இடையே சொத்துச் சண்டை ஏற்பட்டது. அதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்தனர். அதனால், அம்ரோகி கடும் மனஉளைச்சலில் அவதிப்பட்டார். அவருக்கு ப்ரீத்தி ஜிந்தா ஆறுதல் அளித்து வந்தார். தயாரிப்பாளரின் மகன்கள், மகள் இடையேயும் சொத்து தகராறை தீர்க்க உதவி செய்து வந்தார்.
இதையடுத்து, ப்ரீத்தியின் உதவும் உள்ளத்தால் கவரப்பட்ட கமாலின் மூத்த மகன் ஷந்தர், அவரை தனது வளர்ப்பு மகள் என்று அறிவித்தார். அத்துடன், தந்தையின் சொத்து தனக்கு கிடைக்க ஆதரவாக இருந்து வரும் ப்ரீத்திக்கு ரூ.600 கோடி சொத்துகள், வர்த்தகத்தை முழுவதுமாக ப்ரீத்திக்கு எழுதி வைக்கப் போவதாக அதிரடியாக அறிவித்தார். அதை அறிந்து உடனடியாக மறுத்த ப்ரீத்தி ஜிந்தா கூறுகையில், “தயாரிப்பாளர் கமால் அம்ரோகியின் சொத்துக்களுக்கு எந்த வகையிலும் நான் வாரிசு இல்லை. அதனால், சொத்து முழுவதும் அவரது வாரிசுகளைச் சேர்ந்தது. நான் எதையும் ஏற்க ஒப்புக் கொள்ள மாட்டேன்” என்றார்.
Comments
Post a Comment