நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வரும் ஏப்ரல் 14-ம் தேதி புதிய தொலைக்காட்சியான கேப்டன் டிவியைத் துவங்குகிறார். வடபழனி நூறடி சாலைய...
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் வரும் ஏப்ரல் 14-ம் தேதி புதிய தொலைக்காட்சியான கேப்டன் டிவியைத் துவங்குகிறார்.
வடபழனி நூறடி சாலையில் இதற்கென தனி அலுவலகம் துவங்கி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி சித்திரைத் திருநாளில் புதிய டி.வி. ஒளிபரப்பை துவங்க முடிவாகியுள்ளது. தொடக்க விழாவில் கிரிக்கெட் கேப்டன் டோனி பங்கேற்பது உறுதியாகிவிட்டது.
சக நடிகர்களான ரஜினி, கமல் ஹாசன், பிரஜா ராஜ்யம் தலைவர் சிரஞ்சீவி ஆகியோரையும் விஜய்காந்த் அழைத்துள்ளார்.
பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், செய்திகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் கேப்டன் டி.வி. நடுநிலையாக இயங்கும் என்றும், அதற்கு தங்களின் ஆதரவு வேண்டும் என்றும் அவர் திரைத்துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார். எனவே பிற நடிகர்களும் திரளாகக் கலந்து கொள்கின்றனர்.
முதல் படமாக கேப்டன் பிரபாகரன் திரையிடப்படுகிறது. தொடர்ந்து விஜயகாந்த்தின் ஹிட் படங்களுடன் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களின் படங்களையும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நேரங்களில் தேமுதிக கட்சி நிகழ்வுகள் மற்றும் விஜய்காந்த் பங்கேற்கும் நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும்.
Comments
Post a Comment