Rajini's Phone call made Manisha to 'Mother In Law'

கோடம்பாக்கத்தின்  இன்றைய பரபரப்புக்களில்  ஒன்று கமல்,  ரஜினி வரை ஜோடி சேர்ந்து கலக்கிய மனிஷா கொய்ராலா தனுஷுக்கு மாமியாராக திரும்ப நடிக்க வந்திருப்பது!


ரஜினியின் சூப்பர்ஹிட் மசாலா படங்களில்  மாப்பிள்ளை படமும் ஒன்று.  இயக்குனர் சுராஜால் அதே பெய‌ரில் ‌‌ரீமேக் செய்யப்படுகிறது.
ர‌ஜினி நடித்த கேரக்டரில் தனுஷும், அமலா நடித்த கேரக்டரில் ஹன்சிகா மோத்வானியும்,  தனுஷின் மாமியார் வேடத்தில் மானிஷா கொய்ராலாவும் நடித்து வருகின்றனர். ஒ‌ரி‌ஜினல் மாப்பிள்ளை படத்தில் ரஜினியின் மாமியாராக வெளுத்து வாங்கியவர் காலம் சென்ற கலைஞர் ஸ்ரீவித்யா. பல காட்சிகளில் ரஜினியை நடிப்பில் தூக்கி சாப்பிட்டு இருப்பார் ஸ்ரீவித்யா.
இதனால் ஸ்ரீவித்தியாவுக்கு இணையான ஒரு திறமையான நடிகையைத் தேடோ தேடென்று தேடினார்கள். அனுஹாசன் தொடங்கி ஜெயச்சித்ரா,  ஜெயபிரதா, ஸ்ரீதேவி என பலர் ப‌ரிசீலிக்கப்பட்டனர். இறுதியாக மனிஷா கொய்ராலாவை ஒப்பந்தம் செய்து செய்து கடந்த இருபது நாட்களாக ஏ.வி.எம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடத்தி வரும் இயக்குனர் சுராஜ் மானிஷாவின் ஃபெர்பாமென்ஸில் மிரண்டு போயுள்ளார். மிரண்டுபோன இன்னுருவர் தனுஷ்.

மனிஷாவின் அதிரடி ஃபெர்ஃபாமென்சுக்கு காரணம் அம்மையாரின் காஸ்ட்லி கட்டிங்தான்  என்று காதை கடிக்கிறார்கள் யூனிட்டில்.  ஒரு பெக் ரூபாய் ஆறாயிரம் விலையுயர்ந்த ஸ்பெயின் ஒயிட் ஒயினை இறக்கிவிட்டுத்தான் ஷாட்டுக்கே வருகிறாராம். “தனுஷ் எத்தனை பிஸிநடிகர் என்றாலும் எனக்கு கவலையில்லை. நான் மதியம் 1மணிமுதல் மூன்று மணிவரை தூங்குவேன். அதன்பிறகு ஷாட் வைத்துக்கொள்” என்ற நிபந்தனையோடு நடித்துவரும் மனிஷாவுக்கு ஒயின் செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்கிறார்கள்.
மனிஷா விஷயத்தில் நல்ல விஷயம் திருவான்மீயூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தங்கிகொண்டு படப்பிடிப்பு வருவதால் ஹோட்டல் செலவை கட்டிங் செலவாக செய்துவருகிறாரம் தயாரிப்பாளர் ஹிதேஷ் ஜபக். ஆனால் உண்மையான தயாரிப்பளர்கள் சன் பிக்‌ஷர்ஸ். இந்த விஷயம் கலாநிதி மாறன் காதுக்குப்போனதும் “ அட விடுங்கப்பா...ராயல் ஃபாமிலி பொண்ணு “ என்று சொல்லிவிட்டாரம்.
புதிய மாப்பிப்ளையைப் பொறுத்தவரை தனுஷ்- ஹன்ஷிகா சம்பந்தபட்ட காதல் காட்சிகளில் 20 வீதம் மாற்றம் செய்திருக்கும் சுராஜ், தனுஷ் –மனிஷா மோதல் காட்சிகளில் மட்டும் கை வைக்காமல் அப்படியே விட்டு விட்டாராம். இதனால் தனுஷ் –மோனிஷா காட்சிகள் எடுக்கும் முன் சம்பந்தப்பட்ட காட்சியை லேப்டாப்பில் மனிஷாவுக்கு போட்டுக்காட்டியே படம் பிடித்து வருகிறார்.
இந்தியனின் மார்டன் பெண்ணாக கலக்கிய மானிஷா,  மாப்பிள்ளையில் புடவை கட்டிய மாமியாராக கலக்கிக்கொண்டிருக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பில் தனுஷ் - மொனிஷா படங்கள் இன்னும் சில தினங்களில் மீடியாவில் கலக்கும் என்று எதிர்பார்க்கலாம். சரி மனிஷா சென்னை வந்த மர்மம் என்ன எனக் கேட்டால், ரஜினி நேரடியாக போன் செய்து கேட்டுக்கொண்டதால் நடிக்க வந்திருக்கிறார் என்று ரகசியம் உடைக்கிறார்கள் படவட்டாரத்தில். இந்த படம் முடிந்த்தும் தமிழ் சீரியலில் கலக்கும் எண்ணத்தோடு இருக்கிறாரம் மணிஷா என்பது உபரித் தகவல்.

Comments

Most Recent