மணிரத்னத்தின் மெகா ப்ராஜெக்ட் ராவண் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இந்தியில்தான் படத்தின் பெயர் ராவண். தமிழில்...? தமிழ்ப் பெயர் எப்போத...

மணிரத்னத்தின் மெகா ப்ராஜெக்ட் ராவண் ஜூன் மாதம் திரைக்கு வருகிறது. இந்தியில்தான் படத்தின் பெயர் ராவண். தமிழில்...?
தமிழ்ப் பெயர் எப்போதும் மணிரத்னத்துக்கு தகராறுதான். இருவர் படத்துக்கு முதலில் ஆனந்தம் என்று பெயர் வைத்தார். படம் வெளியாகும் போது ஆனந்தம் இருவரானது. அதேபோல் கன்னத்தில் முத்தமிட்டால் படத்துக்கு மணிரத்னம் முதலில் தேர்வு செய்த பெயர் மஞ்சள் குடை.
ராவண் படத்துக்கும் பெயர் சிக்கல். அசோகவனம், ராவணன் என பல பெயர்கள் உலவின. இப்போது ராவணா என்ற பெயரை மணிரத்னம் தேர்வு செய்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் ராவணாவும் உறுதியில்லை, மணிரத்னம் சொல்லும் வரை.
இந்தியாவே எதிர்பார்க்கும் இந்தப் படம் ஜூன் 18 திரைக்கு வருகிறது. இன்றைய தேதியில் இதுதான் ராவண் படத்தின் ரிலீஸ் குறித்த அதிக நம்பகத்தனமான செய்தி.
Comments
Post a Comment