Sarathkumar injured in Kanada film shooting

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-639.jpg
கன்னட பட ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்தில் சரத்குமார் பலத்த காயம் அடைந்தார். ‘சாரதி’ என்ற கன்னட படத்தில் நடிக்கிறார் சரத்குமார். இதில் தர்ஷன் ஹீரோ. தினகர் இயக்குகிறார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நடந்து வந்தது. நேற்று நடந்த ஷூட்டிங்கில், காட்சிப்படி குதிரையில் அமர்ந்து சரத்குமார் வேகமாக வருவது போல படமாக்க இருந்தனர். இதற்காக, முதலில் சில முறை பயிற்சி எடுத்தார் சரத்குமார். கேமரா ஓடத் தொடங்க, ரெடியானது. இயக்குனர் ஆக்ஷன் சொன்னதும், குதிரை இரு கால்களையும் திடீரென மேலே தூக்கியது. இதை சற்றும் எதிர்பார்க்காத சரத்குமார், கடிவாளத்தை இழுத்து குதிரையை அடக்க முயன்றார்.

குதிரையின் வேகத்தில் கடிவாளம் கழன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சரத்குமார் குதிரையில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத படக்குழுவினர் ஷாக் ஆயினர். வேகமாக சென்று, வலியால் துடித்துக்கொண்டிருந்த அவரை தூக்கி, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ‘கீழே விழுந்ததில் இடுப்பு பகுதியில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும்’ என டாக்டர்கள் கூறினர். இதையடுத்து ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

சென்னைக்கு திரும்பிய சரத்குமாரை, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவருக்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ‘சரத்குமார் நன்றாக இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மூன்று வாரத்துக்கு பின் படமாக்குவோம்’ என¢றார் ‘சாரதி’ பட தயாரிப்பாளர் கே.சி.என்.சந்திர சேகரன்.

Comments

Most Recent