மலையாளத்தில் நடிப்பது சினேகாவுக்கு புதிதல்ல. ஏற்கனவே மம்முட்டி நடித்த துருப்பு குலானில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். போக்க ி ரிராஜ...

மலையாளத்தில் நடிப்பது சினேகாவுக்கு புதிதல்ல. ஏற்கனவே மம்முட்டி நடித்த துருப்பு குலானில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
போக்கிரிராஜா என்ற படத்தில் தற்போது மம்முட்டி நடித்து வருகிறார். விருமாண்டி மீசை, தமிழ்நாட்டு பட்டு வேட்டி சட்டை என்று அப்படியே கவுண்டர் கெட்டப். இதில் அவரது தம்பியாக பிருத்விராஜ் நடிக்கிறார்.
அண்ணனுக்காக எதையும் செய்யும் தம்பியாக பிருத்விராஜின் கேரக்டரை உருவாக்கியிருக்கிறார்கள். இவருக்கு ஜோடி ஸ்ரேயா. ஸ்ரேயா மலையாளப் படமொன்றில் நடிப்பது இதுவே முதல் முறை.
மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க சினேகாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளனர். அவரும் பாஸிட்டிவ்வான பதிலை சொல்லியிருப்பதாக மலையாளப் படவுலகம் தெரிவிக்கிறது. இந்தப் படத்தில் கராத்தே ராஜா, பரவை முனியம்மா உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் நடிக்கிறார்கள்.
Comments
Post a Comment