சோனியா அகர்வால்- செல்வராகவன் விவாகரத்து வழக்கில் வரும் மார்ச் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று இத...
சோனியா அகர்வால்- செல்வராகவன் விவாகரத்து வழக்கில் வரும் மார்ச் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.
சென்னை குடும்ப நல நீதிமன்றம் இன்று இதை அறிவித்தது.
காதல் கொண்டேன் படத்தில் நடித்தபோது சோனியாவும் செல்வராகவனும் காதலில் விழுந்தார்கள். பின்னர் இருவருக்கும் விமர்சையாக திருமணம் நடந்தது. ஆனால் ஓராண்டுதான் தாக்குப்பிடித்தது இந்தக் கல்யாணம். நடிகை ஆண்ட்ரியாவுடன் செல்வாவுக்கு தொடர்பு ஏற்பட்டதே இந்த பிரிவுக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது.
இதையடுத்து இருவரும் சென்னை குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு கொடுத்தனர். அதில் இருவரும் மனமொத்து பிரிவாதாக குறிப்பிட்டிருந்ததால், இருவருக்கும் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கியது கோர்ட்.
இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை குடும்ப நலக் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக இறுதி விசாரணையில் தெரிவித்துவிட்டதால், தீர்ப்பை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். இருவருக்கும் அன்று சட்டப்பூர்வ விவாகரத்து வழங்கப்பட்டு விடும் எனத் தெரிகிறது.
Comments
Post a Comment