Sun Network to distribute Disney channels in India

http://indiainteracts.in/gossip/images/Sun-network.jpg
மும்பை: தொலைக்காட்சி உலகில் பெரும் திருப்பமாக, வால்ட் டிஸ்னியின் சேனல்களை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ளது சன் நெட்வொர்க்!

ஏப்ரல் 1ம் தேதி முதல் இனி வால்ட் டிஸ்னியின் சேனல்களை சன் குழுமத்தின் சன் டிஸ்ட்ரிபியூஷன் சர்வீஸஸ் ஒளிபரப்பு செய்யும்.

தனது குழுமச் சேனல்கள் தவிர்த்த வெளியார் சேனல்களை சன் ஒளிபரப்புவது இதுவே முதல் முறை.

இதற்காக வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது சன் குழுமம். இதன்படி டிஸ்னி சேனல், டிஸ்னி எக்ஸ் டி மற்றும் ஹங்காமா டிவி சேனல்களை சன் ஒளிபரப்பவிருக்கிறது.

தமிழகத்தில் சன் கேபிள் மற்றும் டிடிஎச் இணைப்பு பெற்றவர்கள் இந்த சேனல்களைப் பார்க்கலாம். ஐபிடிவி வசதி கொண்டவர்களும் இந்த சேனல்களைப் பார்க்க முடியும்.

இவற்றைத் தவிர, சஹாரா ஒன் போன்ற சேனல்களை கையகப்படுத்தவும் சன் டிஸ்ட்ரிபியூஷன் சர்வீஸ் முயன்று வருகிறது.

இதுகுறித்து சன் டிஸ்ட்ரிபியூஷன் சர்வீஸ் சிஓஓ டோனி டி சில்வா கூறுகையில், "இந்தியா முழுக்க சன் நெட்வொர்க் சேனல்களுக்கு மிகப் பெரிய பார்வையாளர் வட்டம் உள்ளது. டிஸ்னி சேனல்களை ஒளிபரப்புவதன் மூலம் பல கோடி புதிய பார்வையாளர்களைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. சன் டிஸ்ட்ரிபியூஷன் சர்வீஸ் நிறுவனத்துக்கு இது முக்கியமான மைல்கல்.." என்றார்.

இந்த ஒப்பந்தம் தங்களுக்கு மிக முக்கியமானது என்று வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.


MUMBAI: In a major development, the Walt Disney channels have decided to move out of Star Den's distribution network. The bouquet of three channels will be handled by Sun Distribution Services, the recently floated distribution arm of Sun TV Group, from 1 April.

This will be the first time that Sun will get to distribute channels outside its network, creating a bouquet that would have appeal outside the southern language TV audiences.

Indiantelevision.com was the first to report that Sun TV Network would enter into the distribution of television channels business, along the lines of Star Den, Zee Turner and MSM Disocvery.

As part of this plan, Sun has signed a multi-year distribution agreement with The Walt Disney Company to distribute Disney Channel, Disney XD and Hungama TV across multiple platforms, including cable TV, DTH and IPTV, in India.

Says The Walt Disney Company India MD Mahesh Samat, "We are delighted to partner with Sun Distribution Services, to further strengthen the reach and relevance of Disney in India. Our agreement further consolidates the strong position of Disney Channel, Disney XD and Hungama TV across multiple platforms in the country and provides kids and families increased access to content anywhere and anytime."

Sun Distribution Services, a division of Sun Network Group's Kal Comm Pvt Ltd, will target several independent channels like Sahara One.

Comments

Most Recent