Trisha investing in Mumbai

திரிஷா 1999-ல் திரையுலகுக்கு வந்தார். இதுவரை தமிழ், தெலுங்கில் 35 படங்களில் நடித்து விட்டார். தெலுங்கு பட உலகில் ரூ.1 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். “லேசா லேசா” கதாநாயகியாக அறிமுகமான படம். சாமி, கில்லி, திருப்பாச்சி, குருவி, அபியும் நானும் என பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது காட்டா மிட்டா என்ற இந்தி படத்தில் நடிக்கிறார். மேலும் 3 இந்திப் படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். இதையடுத்து மும்பையில் செட்டில் ஆகும் முடிவில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

திரிஷா வீடு ஆரம்பத்தில் புரசைவாக்கத்தில் இருந்தது. இப்போது அடையாறு பார்க் ஓட்டல் அருகில் உள்ள புதிய வீட்டுக்கு குடி பெயர்ந்துள்ளார். அங்கிருந்து மும்பைக்கு நிரந்தரமாக குடி பெயரப்போவதாகவும், இதற்காக அங்கு வீடு பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, மறுத்தார். முதலீடு செய்வதற்காகத்தான் வீடு தேடுகிறேன் என்றார்.

மும்பையில் 3 பங்களா வீடுகள் விலைக்கு வந்துள்ளதாம். அவற்றை விலை பேசி வருகிறார். வீடுகளை வாங்கி வாடகைக்கு விட முடிவு செய்துள்ளாராம்.


Update 2

மற்றவர்களுக்கு சினிமாவுக்கு போவது, க்ளப், பார்ட்டிகளுக்குப் போவது பொழுதுபோக்கு என்றால், த்ரிஷாவின் ரேஞ்சே வேறு.

இப்போதெல்லாம் பார்ட்டி, நைட் கிளப் விவகாரங்களைக் குறைத்துக் கொண்டு, கையில் குவிகிற பணத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்வதையே பொழுது போக்காக வைத்துள்ளாராம் த்ரிஷா.

சில மாதங்களாக அவர் மும்பையில் தேடித் தேடி வீடு பார்த்து வருவதாக செய்திகள் வந்தன. ஒருவேளை நிரந்தரமாக மும்பையிலேயே தங்கி விடுவாரோ என்று கேள்வி எழுப்பி வந்தனர் மீடியாவில்.

சமீபத்தில் சென்னையில் நடந்த பிரஸ் மீட்டில் த்ரிஷாவிடம் இதுபற்றி கேட்டதற்கு அவர் இப்படிச் சொன்னார்:

"நான் சென்னைப் பொண்ணு... மும்பை போற எண்ணமெல்லாம் கிடையாது. ஆனால் நல்லதா வீடுகள் கிடைச்சா வாங்கணும்னு எனக்கு ஆசை. அது ஒரு ஹாபி ஆகிடுச்சி இப்போ. மும்பையில் மூன்று வீடுகள் விற்பனைக்கு வந்தன. நல்ல வீடுகள் என்பதால் உடனே வாங்கிப் போட முடிவு செய்தேன். ஹைதராபாத் போன்ற நகரங்களிலும் வாங்க ஆசைப்படுகிறேன். அதேபோல வெளிநாட்டிலும் வீடு வாங்க ஆசை..." என்றார்.

Comments

Most Recent