'Valiban' shooting to start soon - Shimbu

http://cinema.dinakaran.com/cinema/gallery/kw533.jpg

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துக்குப் பிறகு சிம்பு நடிக்கும் படம் ‘வாலிபன்’. இளமையான காதல் கதை கொண்ட இப்படத்தை, சிம்பு, இயக்கி நடிக்கிறார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரிக்கிறார். சிம்பு ஜோடியாக நடிக்க, சரத்குமார் மகள் வரலட்சுமி மற்றும் ஸ்ருதி ஹாசனிடம் பேசி வருகின்றனர். ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தின் ஷுட்டிங் கடந்த மாதம் துவங்குவதாக இருந்தது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் புரமோஷன் வேலைகளில் சிம்பு இருந்ததால் தொடங்கவில்லை. இதையடுத்து இம்மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்குகிறது. ‘மார்ச் 25&ம் தேதி ஷூட்டிங் தொடங்கும். தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இதில், காதல் கதையுடன் நாட்டுப்பற்று மிகுந்த ஒரு மெசேஜ் இருக்கும்‘ என்று பட வட்டாரங்கள் தெரிவித்தன.

Comments

Most Recent