Vikram as Don in untitled Boopathy Pandian film

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-628.jpg
பூபதி பாண்டியன் இயக்கும் படத்தில் டான் வேடத்தில் நடிக்கிறார் விக்ரம். இதுகுறித்து பூபதி பாண்டியன் கூறியதாவது: விக்ரம், இலியானா நடிக்கும் படத்துக்கு பெயர் இன்னும் முடிவாகவில்லை. ஏப்ரல் 10&ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்குகிறது. முதல் ஷெட்யூல் சென்னையில் நடக்கும். அதன் பின் ஐதராபாத் மற்றும் வெளிநாட்டில் நடைபெறும். இது போலீஸ் கதை படம் என்கிறார்கள். அது உண்மையில்லை. காவல்துறைக்கு சவாலாக அமையும் டான் கதை. இதில் டானாக விக்ரம் நடிக்கிறார். இப்போது இயக்கி வரும் ‘நான் அவளை சந்தித்தபொழுது’ ஷூட்டிங் முடிந்துவிட்டது. புதுமுகங்கள் நடிக்கிறார்கள். ஏப்ரலில் ரிலீசாகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு முக்கியத்துவம் தந்துள்ள படமிது. இவ்வாறு பூபதி பாண்டியன் கூறினார்.

Comments

Most Recent