அமெரிக்காவில் விண்ணைத்தாண்டி வருவாயா கலெக்சனை குவித்து வருகிறது. அமெரிக்காவிலுள்ள ரசிகர்களை சந்திக்க விரைவில் சிம்பு அமெரிக்கா செல்லு...
அமெரிக்காவில் விண்ணைத்தாண்டி வருவாயா கலெக்சனை குவித்து வருகிறது. அமெரிக்காவிலுள்ள ரசிகர்களை சந்திக்க விரைவில் சிம்பு அமெரிக்கா செல்லும் திட்டமும் தயாரிப்பாளர்களிடம் உள்ளது.
விண்ணைத்தாண்டி வருவாயா யுகே-யிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இங்குதான் படத்தின் ஆடியோ முதலில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
யுகேயில் இரண்டாவது வாரத்தில் 12,570 பவுண்ட்களை இப்படம் வசூலித்துள்ளது. நான்கு திரையிடல்களில் இந்த வசூல் கிடைத்துள்ளது. சென்ற வாரம் வரை இப்படம் வசூலித்திருப்பது 42,552 பவுண்ட்கள். அதாவது ஏறக்குறைய 29 லட்சங்கள்.
அசல் யுகே-யில் சென்ற வாரம் வரை 46.72 லட்சங்களை வசூலித்துள்ளது.
Comments
Post a Comment