Vishal in Sun Pictures

http://4.bp.blogspot.com/_FylGS8_9K7U/SR1j5Fu4DSI/AAAAAAAAKAs/7JXPpTu1BPE/s400/vishal_0004.jpg

விஷாலும், அவரது அண்ணனும் தீராத விளையாட்டுப் பிள்ளை தயா‌ரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணாவும் சமீபத்தில் எடுத்த நல்ல முடிவு, படத்தை சன் பிக்சர்ஸுக்கு கைமாற்றியது.

இந்த ப‌ரிவாத்தனை மட்டும் நடக்கவில்லையென்றால் விஷாலின் மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக தீராத விளையாட்டுப் பிள்ளை அமைந்திருக்கும்.

சன் பிக்சர்ஸின் அபி‌ரிதமான விளம்பரத்தால் படம் சுமாராக ஓடுகிறது. இதனை நன்கு உணர்ந்த விஷால் மேலுமொரு படம் சன் பிக்சர்ஸுக்காக நடிக்கிறார்.

விஷால் சன் பிக்சர்ஸுக்காக நடிக்கும் படத்தின் இயக்குனர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அனேகமாக தெலுங்கில் வெற்றிபெற்ற சௌக‌ரியம் படத்தின் ‌ரீமேக்காக அது இருக்கலாம் என்கிறார்கள்.

Comments

Most Recent