இணையதளங்களில் சாமியார் நித்யானந்தருடன் நடிகை யுவராணி இணைந்து இருப்பதுபோன்ற படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படு...
இணையதளங்களில் சாமியார் நித்யானந்தருடன் நடிகை யுவராணி இணைந்து இருப்பதுபோன்ற படங்கள் மற்றும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த படங்களை தடுக்க வேண்டும் என்று யுவராணி போலீசில் புகார் செய்துள்ளார். நடிகை ரஞ்சிதாவும், சாமியார் நித்தியானந்தாவும் படுக்கை அறையில் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை யுவராணிக்கும் நித்தியானந்தரோடு தொடர்பு இருப்பதாக செய்தி வெளியானது. அவற்றை மறுத்த யுவராணி, நித்யானந்தாவை நம்பி தான் மோசம் போய் விட்டதாகவும் கூறினார். இந்நிலையில் நித்யானந்தாவும், யுவராணியும் ஒன்றாக இருக்கும்படியான ஆபாச படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த படத்தில் இருக்கும் பெண் யுவராணியா என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், யுவராணி உடலமைப்பை ஒத்த உடலமைப்புடனான பெண்ணுடன் நித்யானந்தா இருக்கிறார்.
இதனையறிந்த யுவராணி, நேற்று (23ம்தேதி) சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நித்யானந்தாவோடு என்னை இணைத்து ஆகிய இணையதளங்களில் செய்திகள் வெளியானதாக எனது உறவினர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நானும் அந்த இணையதளங்களை பார்த்தேன். அதில், தவறான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்னுடைய பழைய படங்கள்தான் வெளியாயின. என்னை பற்றிய படங்கள் எதுவும் வெளிவந்தால் அதை தடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். என்னுடைய கணவரோடு கலந்து பேசி விரைவில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து விளக்கமாக பேட்டி கொடுப்பேன், என்றார்.
Comments
Post a Comment