Rajini - Kamal to participate in Kalaignar film city function

foundation stone for Kalaigar Thirai Oor
சென்னையில் உருவாகும் சினிமா நகரத்துக்கு வருகிற 23ம்தேதி, முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வீடு கட்டுவதற்காக, சென்னையை அடுத்த பையனூரில் 65 ஏக்கர் நிலத்தை முதல்வர் கருணாநிதி சமீபத்தில் வழங்கினார். அந்த இடத்தில், திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வீடுகளும், ஒரு படப்பிடிப்பு தளமும், ஒரு மருத்துவமனையும் கட்டப்படுகிறது. இதற்கு, 'கலைஞரின் திரை ஊர்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கலைஞரின் திரை ஊருக்கான அடிக்கல் நாட்டு விழா பையனூரில் வருகிற 23ம்தேதி நடக்கிறது. விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.
நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். மற்றும் திரையுலக முன்னணி நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

பிரமாண்டமாக நடைபெறவுள்ள இவ்விழா குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் அளித்துள்ள பேட்டியில், 23 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்களின் இல்லமும், தொழிலகமும் கொண்ட கலைஞரின் திரை ஊர் வெகுவிரைவாக உருவாக ஆக்கப்பணிகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன. கலைஞரின் திரை ஊரில் தொழிலாளர்களின் வீடுகளுடன், ஹாலிவுட் தரத்தில் ஒரு படப்பிடிப்பு தளமும் கட்டப்படுகிறது. கூடவே ஒரு பாடல் பதிவு கூடமும், எடிட்டிங், டப்பிங் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிலையங்களும் அமைக்கப் படுகின்றன. அமெரிக்காவில் சினிமா தொழிலுக்கு பெயர்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மாதிரி, கலைஞரின் திரை ஊர், இந்தியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமாக அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்காக, தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்தாய்வு செய்து வருகிறோம். இந்த அடிக்கல் நாட்டு விழாவை தமிழ் திரைப்பட உலகமே திரண்ட ஒரு மாபெரும் விழாவாக நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம், என்று கூறியுள்ளார்.

Update

சென்னையில் புதிதாக உருவாகும் சினிமா நகரத்துக்கு வருகிற 23-ந் தேதி, முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டுகிறார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரும் பங்கேற்று, படப்பிடிப்பு தளம் மற்றும் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.

திரைப்பட தொழிலாளர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வீடு கட்டுவதற்காக, சென்னையை அடுத்த பையனூரில் 65 ஏக்கர் நிலத்தை முதல்வர் கருணாநிதி வழங்கியிருக்கிறார்.

அங்கு, திரையுலகை சேர்ந்தவர்களுக்கு வீடுகளும், ஒரு படப்பிடிப்பு தளமும், ஒரு மருத்துவமனையும் கட்டப்படுகிறது. இதற்கு, கலைஞரின் திரை ஊர் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

கலைஞரின் திரை ஊருக்கான அடிக்கல் நாட்டு விழா, பையனூரில் வருகிற 23-ந் தேதி நடக்கிறது. விழாவில், முதல்வர் கருணாநிதி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டுகிறார்.

விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக ரஜினி, கமல் இருவரும் பங்கேற்கிறார்கள்.

திரைப்பட நகருக்கு முதல்வர் அடிக்கல் நாட்ட, நகரின் படப்பிடிப்பு தளத்துக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கல் நாட்டுகிறார். மருத்துவமனைக்கு கமல்ஹாசன் அடிக்கல் நாட்டுகிறார்.

இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகிறது.

இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன் கூறுகையில், "23 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்களின் இல்லமும், தொழிலகமும் கொண்ட 'கலைஞரின் திரை ஊர்' வெகுவிரைவாக உருவாக ஆக்கப்பணிகள் தொடங்க ஆரம்பித்துவிட்டன.

திரைத் துறையினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 65 ஏக்கர் நிலப்பரப்பையும் நேற்று காட்டினார்கள் வருவாய்த் துறை அதிகாரிகள்.

கலைஞரின் திரை ஊரில், ஹாலிவுட் தரத்தில் ஒரு படப்பிடிப்பு தளமும் கட்டப்படுகிறது. கூடவே ஒரு பாடல் பதிவு கூடமும், எடிட்டிங், டப்பிங் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

அமெரிக்காவில் சினிமா தொழிலுக்கு பெயர்பெற்ற லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் மாதிரி, 'கலைஞரின் திரை ஊர்,' இந்தியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமாக அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதற்கான பணிகளில் இறங்கியுள்ளோம்" என்றார்.

Comments

Most Recent