ஊடக வெளிச்சத்தில் எப்போதும் குளிர்காய்ந்து வந்த ரோஜா, ஆந்திர அரசியல் களத்தில் இருந்தவரை ரோஜா சினிமா மற்றும் டீவி வாய்ப்புக்களைத் தவிர்த்த...
ஊடக வெளிச்சத்தில் எப்போதும் குளிர்காய்ந்து வந்த ரோஜா, ஆந்திர அரசியல் களத்தில் இருந்தவரை ரோஜா சினிமா மற்றும் டீவி வாய்ப்புக்களைத் தவிர்த்தே வந்தார்.
ஆனால் தேலுங்கு தேசம் கட்சியின் உட்கட்சிப் பூசலும், தெலுங்கானா தலைவலியும் ஆந்திர அரசியலில் நமக்கு ஆவது ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு ரோஜாவைத் தள்ளிவிட, கணவர்குலத்தின் அறிவுரையை ஏற்று, மொத்த அரசியலுக்கும் இப்போது குட்பை சொல்லி விட்டு தமது ஹைதராபாத் அலுவலகத்தையும் மூடிவிட்டு சென்னை வந்து விட்டார்.
இப்போது தமிழ்சினிமாவில் தனது ரீஎண்ட்ரியை பவர்ஃபுல்லாக கொடுக்க வேண்டும் என்று காத்திருந்தவருக்கு கைகொடுத்தாராம் ரோஜாவின் காதல் கணவரும், இயக்குனர்கள் செயலாளருமான ஆர்.கே. செல்வமணி.
தனது மனைவிக்கு நல்ல ரீ என்ரி தேவை என்பதை விஜயின் தந்தை எஸ்.ஏ.சியிடம் சொல்ல, அவரோ “ ரோஜாவின் மேடைபேச்சுத் திறமைப் பற்றி நான் நன்கு அறிவேன்.
நாம் இயக்கம் ஆரம்பிக்கும்போது ரோஜா அதில் இருந்தால், அவருக்குரிய நல்ல முன்னேற்றத்துக்கு நான் கேரண்டி, என்ன சொல்கிறீர்கள்? ” என்று கேட்க, “ விஜய் கட்சியில் ரோஜாவுக்கு ஒரு நல்ல இடமென்றால் நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என ஒப்புக்கொண்டதாகவும், அதன்பிறகே காவல்காரனில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் எஸ்.ஏ.சி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சித்திக் மலையாளத்தில் இயக்கிய 'பாடிகார்ட்' படத்தின் ரீமேக்கான வேட்டைக்காரனில் விஜய் ஜோடியாக அசின் நடிக்கிறார். மலையாளத்தில் நயன்தாரா நடித்த கேரக்டர் இது.
அசினின் தந்தையாக ராஜ்கிரண் நடிக்கிறார். விஜய், ராஜ்கிரண் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை. ராஜ்கிரணின் மனைவியாகவும், அசினின் அம்மாவாகவும் ரோஜா நடிக்கயிருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் காவல்காரன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒவ்வொரு நாள் சூட்டிங் முடிந்ததும் 50 ரசிகர்களை பர்செனலாக சந்தித்து ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறாராம் விஜய்.
விஜய் மன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் கட்சியைபோல இப்போது உறுப்பினர் அடையாள அட்டையையும் வழங்க ஆரம்பித்திருக்கிறார்களாம்.
Comments
Post a Comment