கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், த்ரிஷா நடிக்கும் படம் ‘யாவரும் கேளிர்’. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் மாத...
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல், த்ரிஷா நடிக்கும் படம் ‘யாவரும் கேளிர்’. உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கிறார். இதில் முக்கிய வேடத்தில் மாதவன் நடிக்கிறார். இருவரும் சேர்ந்து ‘அன்பே சிவம்’ படத்தில் நடித்திருந்தனர். முழு நீள காமெடி கதை படமாக இது உருவாகிறது. கமலுடன் இதில் உதயநிதி ஸ்டாலினும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து யாவரும் கேளிர் படத்தின் பெயர் காருண்யம் என மாற்றப்பட்டுள்ளது. முக்கோணக் காதல் கதையான இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கமல்ஹாசனுடன் பிரசாத் இணைவது இது 2வது முறை. இப்படத்தின் புதிய தலைப்பான காருண்யமும், அன்பும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment