சன் டி.வி.யில், பிரமாண்டமான இசை நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கான குரல் தேர்வு, சென்னையில் ந...
சன் டி.வி.யில், பிரமாண்டமான இசை நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கான குரல் தேர்வு, சென்னையில் நாளை நடக்கிறது. குரல் வளம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, சன் டி.வி., பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. தமிழ் தொலைக்காட்சிகளில் இதுவரை வந்திராத, புதுமையான நிகழ்ச்சியாக இது இருக்கும். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் இந்த இசை நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இதற்கான குரல் தேர்வு தமிழகமெங்கும் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி, மதுரை, கோவையில் ஏற்கனவே குரல் தேர்வு நடத்தப்பட்டு விட்டன. சென்னையில் நாளை நடக்கிறது.
தி.நகர், அபிபுல்லா சாலையில் உள்ள கர்நாடகா சங்கம் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் குரல் தேர்வு நடக்கும். இதில் 8 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் கலந்துகொள்ளலாம். சென்னை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள் இந்த குரல் தேர்வில் கலந்துகொள்ளலாம். இதில், சிறப்பாக பாடுபவர்கள், பிரபலமான பாடகர்களோடு சேர்ந்து பாடும் அரிய வாய்ப்பை பெறுவார்கள்.
Comments
Post a Comment