கோடம்பாக்கம் கோடங்கி நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... பாவனை நடிகைக்கு தமிழ்ல படங்களே இல்ல. பிசியா நடிச்சப்போ விளம்பர பட...
கோடம்பாக்கம் கோடங்கி
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...
பாவனை நடிகைக்கு தமிழ்ல படங்களே இல்ல. பிசியா நடிச்சப்போ விளம்பர படங்கள்ல நடிக்க மறுத்தாரு... மறுத்தாரு... இப்போ படம் இல்லாததால விளம்பரத்துல நடிக்க ஓகே சொல்லியிருக்காரு... சொல்லியிருக்காரு... இன்னும் சில விளம்பர நிறுவனங்கள்ல நடிக்க தூது அனுப்பி இருக்கிறாராம்... இருக்கிறாராம்...
பளார் இயக்குனரோட சமவெளி படத்துல புது ஹீரோயின் நடிக்கிறாரு. இயக்குனரு பத்தி தெரிஞ்ச நடிகை, உள்ளுக்குள்ள பயந்துகிட்டே நடிக்கிறாராம்... நடிக்கிறாராம்... மகளுக்கு எதுவும் நடந்துடக்கூடாதுன்னு தாய்க்குலம் எப்பவும் கூடவே இருக்காராம்... இருக்காராம்...
இளைஞன் படத்தை ஆரம்பிக்க இருந்தாரு விரலு நடிகரு. ஆனா கொஞ்ச நாள் பொறுங்கன்னு தயாரிப்பு சொல்லியிருக்காராம்... சொல்லியிருக்காராம்... கவுதம இயக்குனர் படத்துல நடிக்கிறதா இருந்தாரு. அவரும் இப்போதைக்கு வேணாம்னு சொல்லிட்டாராம்... சொல்லிட்டாராம்... சாமி இயக்குனர் தயாரிப்புல நடிக்கிற படமும் தள்ளிப்போகுதாம். அதனால குழப்பத்துல இருக்கிறாராம்... நடிகரு குழப்பத்துல இருக்கிறாராம்...
Comments
Post a Comment