நியாயமான காரணங்களுக்காக மீடியாவில் தாம் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் பக்குவம் பெற்ற நடிகர் பிரசன்னா. ஆனாலும் அவரைச் சுற்றி தேவையில...
நியாயமான காரணங்களுக்காக மீடியாவில் தாம் பேசப்பட வேண்டும் என்று நினைக்கும் பக்குவம் பெற்ற நடிகர் பிரசன்னா. ஆனாலும் அவரைச் சுற்றி தேவையில்லாத ஒரு கிசுகிசுவைப் பரப்பி வருகிறார்களாம். அது சினேகா விவகாரம்.
ஒரேயொரு படத்தில்தான் இருவரும் நடித்தார்கள். அது அச்சமுண்டு அச்சமுண்டு. அதன் பிறகு இருவரும் அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டாலும், இருவருக்கும் திருமணம் என்கிற ரேஞ்சுக்கு கிசுகிசுக்கள் றெக்கை கட்டிப் பறக்க, வருத்தத்தில் இருக்கிறார் பிரசன்னா.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு காதல், திருமணம் என எது நடந்தாலும் நிச்சயம் அது ஒளிந்து கொண்டு செய்ய மாட்டேன். என்னையும், சினேகாவையும் இணைத்து சமீபகாலமாக கிசுகிசுக்கள் பரவுவது எனக்கு தெரியும். சினேகாவுக்கும் இது தெரியும்.
நானும் சினேகாவும் படம் பார்க்கப் போய் இருக்கிறோம். ஆனால் நாங்கள் இருவர் மட்டுமல்ல. மற்ற நண்பர்களும் எங்களுடன் வந்து இருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர்கள் அவர்கள். இயக்குநர் வெங்கட்பிரபு, பிரேம்ஜி, ஜெய் இப்படி... இவர்களுடன்தான் நானும் சினேகாவும் கோவா படம் பார்த்தோம்.
நான் ஏற்கெனவே எனக்கும் சினாகாவுக்கும் இடையே நட்பைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று கூறிவிட்டேன். ஆனாலும் விடாமல் ஏதாவது எழுதுகிறார்கள்... என்னன்னு சொல்றது போங்க!" என்றார்.
Comments
Post a Comment