Police raid musical stores in Chennai

http://thatstamil.oneindia.in/img/2010/04/07-ilayaraja-200.jpg
சென்னை: இளையராஜா கொடுத்த புகார் அடிப்படையில் எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மீது போலீசார் வழக்குப்பதிவு, சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தான் இசையமைத்த சினிமா பாடல்களின் ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள் வெளியிட்டது தொடர்பாக தனக்கு கொடுக்க வேண்டிய 'ராயல்டி' தொகையை கொடுக்காததால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்த புகார் மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் விமலா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் முத்துவேல்பாண்டி 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து நேற்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஏவிஎம். மியூசிக், சரஸ்வதி ஸ்டோர் என்ற கடையில் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு அனுமதி பெறாமல் இருந்த ஆடியோ சினிமா பாடல் சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கோபாலபுரத்தில் உள்ள எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திலும் சோதனை நடைபெறும் என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Comments

Most Recent