Vivek Oberoi visits Trichy - Madurai

http://thatstamil.oneindia.in/img/2010/04/09-vivek-oberoi-200.jpg
தனது பிரின்ஸ் படம் இன்று வெளியாவதையொட்டி, தமிழகத்தின் திருச்சி, மதுரை போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டார் விவேக் ஓபராய்.

பிரபல இந்தி நடிகர் விவேக் ஒபராய் நடித்த 'பிரின்ஸ' என்ற இந்திப் படம் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் சென்னைக்கு வந்து நிருபர்களைச் சந்தித்துப் பேசினார்.

தற்போது தமிழகத்தின் இதர முக்கிய நகரங்களுக்குச் சென்று ரசிகர்களைச் சந்தித்து வருகிறார் விவேக். நேற்று திருச்சி வந்த விவேக் ஒபராய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அவர் கூறியதாவது:

திருச்சி எனக்கு புதிது. எப்போதும் பிடித்தது சென்னை. காரணம் என் தாய் நகரம் சென்னைதான்.

அதனால் தமிழ்நாடு மீது பெரும் மதிப்பு எப்போதும் உண்டு. சுனாமியின் போது கிராமங்களை தத்தடுத்து மீட்பு பணி செய்தேன். அப்போது 'நடிகர் அண்ணா'ன்னு பாசத்துடன் மக்கள் அழைத்ததை மறக்க முடியாது.

தமிழ் சினிமா மார்க்கெட் பெரியது. இதனால் தான் எனது பிரின்ஸ் படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறேன்.இந்த படம் ஹாலிவுட் படங்களுக்கு நிகராக எடுக்கப்பட்டது.

இந்திய சினிமாவில் ஞாபகமறதி கதாபாத்திரம் கொண்ட படங்கள் 84 வெளி வந்து உள்ளது. இதுவும் கதாநாயகனின் மறதி பற்றிய கதைதான் மெகா திருடனாக நடிக்கிறேன். என் நினைவுகளை திருட வில்லன், போலீஸ் என்னை துரத்தும் 6 நாள்களுக்குள் அவர்கள் என்னை பிடிக்கனும் இதை சுவராசியமாக எடுத்து உள்ளோம்.

ரஜினி, கமல் நடித்த தமிழ்ப் படங்களைப் பார்த்து வளர்ந்தவன் நான். அவர்களையே குருவாக ஏற்று நடிக்க ஆரம்பித்தேன்... இன்று நானும் ஒரு நடிகனாகிவிட்டேன். எனது படம் வெற்றி பெற ஆதரவு தாருங்கள்...", என்றார்.

Comments

Most Recent