நடிப்பு ஆசிரியை ஆனார் அனூயா

Anuya
‘சிவா மனசுல சக்தி’, ‘மதுரை சம்பவம்’ படங்களில் நடித்தவர் அனுயா. இப்போது சுந்தர்.சி ஜோடியாக ‘நகரம்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு டீச்சராகவும் பணியாற்றி வருகிறார்.

டீச்சரானது எப்படி?

புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில்தான் படித்தேன். படிக்கும்போதே இங்குள்ள ஆசிரியர்கள் எனது நடிப்பாற்றலை பாராட்டினர். அப்போதே ஆசிரியை வேலை கிடைத்தது. ஆனால் சினிமாவுக¢கு தடையாக இருக்கும் என ஒப்புக்கொள்ளவில்லை. பின் தமிழில் வாய்ப்பு கிடைத்தது. இரு படங்களை முடித்துவிட்டேன். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் குறைவாகவே கிடைக்கிறது. அதனால் புனே திரைப்படக் கல்லூரியில் சேர்ந்திருக்கிறேன். இங்கு மாணவிகளுக்கு நடிப்பு சொல்லித் தருகிறேன். அதே நேரம், குறும்படம் இயக்கும் மாணவர்களுடன் இணை இயக்குனராகவும் பணியாற்றுகிறேன்.

இயக்குனராகும் ஆசை?

கண்டிப்பாக இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு இல்லை.

‘நகரம்’ படத்தில் என்ன கேரக்டர்?

சுந்தர்.சி நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கும் படமிது. அதனாலேயே இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன். அவரது இயக்கத்தில் வெளியான படங்கள் எனக்கு பிடிக்கும். ‘நகரம்’ படத்தில் வேலைக்கு செல்லும் நடுத்தர குடும்பத்து பெண் கேரக்டர். ஹோம்லியாக நடித்துள்ளேன். இப்படத்தால் எனக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

மேடை நாடகங்களில் நடித்து வந்தீர்களே?

மும்பையில் நடந்த ஆங்கில மேடை நாடகங்களில் நடித்தேன். இப்போது ஆசிரியை பணிக்கு நேரம் சரியாக இருக்கிறது. நல்ல கதையுள்ள நாடகங்கள் கிடைத்தால் நடிப்பேன். தமிழிலும் மேடை நாடகங்களில் நடிக்க விரும்புகிறேன்.

Comments

Most Recent