பவதாரிணி இசையில் பாடல் எழுத ஆசை...
"உலகத்தில் ஒரு நாள் மின்சாரம் இல்லை. கம்யூட்டர்கள் வேலை செய்யாது. ஆர்மோனியப் பெட்டியை வைத்துதான் டியூன் போட முடியும் என்ற சூழல் வந்தால் இளையராஜாவால்தான் முடியும். அவரின்  இசைப் பயணம் சாதாரணமானது அல்ல. அது ஒரு தவம். வேதங்களை அவரால் பிழையின்றி சொல்ல முடியும். தமிழ்நாடு செய்த தவம் இளையராஜா. யாருடைய வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது என்பதற்கு இளையராஜா நல்ல உதாரணம். வானம் அளவு உயர்ந்த பின்பும் வானத்தை பார்த்து நடக்காமல் பூமியைப் பார்த்து நடக்கிறவர் இளையராஜா. எந்த ஏற்றத் தாழ்வுகளும் இளையராஜாவை அசைக்க முடியாது. இளையராஜாவின் மூன்று குழந்தைகளும் இசையில் நன்றாக இருக்கிறார்கள். 15,000 பாடல்கள் எழுதி விட்டேன். பவதாரிணி இசையில் பாடல் எழுதாமல் இருப்பதால்தான் இன்னும் என் இசை வாழ்வு முற்றுப் பெறவில்லை என நினைக்கிறேன். பத்மபூஷன் விருதெல்லாம் இளையராஜாவை பெருமைப்படுத்தி விட முடியாது. இளையராஜா தமிழகத்தின் பெருமை'.சமீபத்திய விழா ஒன்றில் இப்படிச் சொன்னார் கவிஞர் வாலி.

Comments

Most Recent