அஜீத் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் "மங்காத்தா"!

http://icdn1.indiaglitz.com/tamil/news/ajith280610_2.jpg
துப்பறியும் ஆனந்த் என்ற படத்தில் இணைவதாக இருந்த அஜீத்தும், கெளதம் மேனனும் இப்போது திடீரென பிரிந்து விட்டனர். படத்தின் பெயரையும் மங்காத்தா என்று மாற்றியுள்ளனராம். படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு. அஜீத்துக்காக கெளதம் மேனன் தயார் செய்த கதைதான் துப்பறியும் ஆனந்த். இதில் அஜீத் துப்பறியும் நிபுணராக நடிப்பார் என கூறப்பட்டிருந்தது. நாயகியாக சமந்தா நடிப்பார் எனவும் கூறப்பட்டிருந்தது.

இப்போது பெரும் மாற்றம். படத்தை இயக்கப் போவது கெளதம் மேனன் இல்லையாம். வெங்கட் பிரபு படத்தை இயக்குவார் என கூறப்பட்டுள்ளது. அஜீத்துக்கும், கெளதம் மேனனுக்கும் இடையே கருத்து வேறுபாடு பெரிதாகி விட்டதால் பிரிவது என முடிவெடுத்து விட்டனராம்.

Comments

Most Recent