மீண்டும் "இது மாலை நேரத்து மயக்கம்"

http://mimg.sulekha.com/tamil/idhu-malai-nerathu-mayakkam/idhu-malai-nerathu-mayakkam_m.jpg 
மீண்டும் தம்பி தனுஷை இயக்குகிறார் செல்வராகவன். படம் ஏற்கனவே தொடங்கப்பட்ட இது மாலை நேரத்து மயக்கம். ஆயிரத்திரல் ஒருவன் படத்துக்குப் பிறகு விக்ரம், ஸ்வாதி நடிப்பில் க்ரைம் த்‌ரில்லர் படமொன்றை செல்வராகவன் தொடங்கினார். லடாக்கில் படத்தின் முதல் ஷெட்யூல் படமானது. ரமேஷ்பாபு தயா‌ரித்த இந்தப் படம் பைனான்ஸ் உள்ளிட்ட சில காரணங்களால் தடைபட, தமிழ், தெலுங்கில் புதிய புராஜெக்ட் ஒன்றை செல்வராகவன் தொடங்கினார். இந்த இரு மொழி படத்தில் ராணா நடிப்பதாக இருந்தது.

ச‌ரித்திரப் பின்னணியில் உருவாக இருந்த இந்தப் படம் திடீரென கைவிடப்பட்டது. காரணம் தயா‌ரிப்பாளர். இப்படி அனைத்து வாசல்களும் அடைபட, சற்றும் மனம் தளராத செல்வராகவன் ஏற்கனவே தொடங்கி பாதியில் கைவிட்ட இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தூசு தட்டியிருக்கிறார்.

தனுஷ், ஆன்ட்‌ரியா நடிக்கும் இந்தப் படத்தின் வேலைகளை நேற்று முதல் தொடங்கியிருக்கிறார் செல்வராகவன். ‌ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ராம்‌ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படம் மற்ற இரு படங்களைப் போல திடீரென நூலறுந்துப் போக வழியில்லை. காரணம் நடிப்பது தம்பி தனுஷ், தயா‌ரிப்பது அப்பா கஸ்தூ‌ரிராஜா.

Comments

Most Recent