வீரசோழன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மாவின் கையைப் பிடித்து சிலர் இழுத்து கலாட்டா செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது....
வீரசோழன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை ஸ்வாதி வர்மாவின் கையைப் பிடித்து சிலர் இழுத்து கலாட்டா செய்ததால், பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தம்.
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலத்தில் வீர சோழன் படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அங்கு திருவிழா காட்சியொன்றை இயக்குனர் அன்பு சரவணன் படமாக்கினார்.
இதனால் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. உடனடியாக அங்கு கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டனர். அவர்கள் ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை தடியடி நடத்தி விரட்டினார்கள்.
தொடர்ந்து அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு மானாமதுரை அருகே உள்ள கீழமேல்குடிக்கு மாற்றப்பட்டது.
சமீபத்தில் வெளியான 'துரோகம் நடந்தது என்ன?' படத்தில் படுகவர்ச்சியாக நடித்துள்ளவர் இந்த ஸ்வாதி வர்மா.
Comments
Post a Comment