Debut Actress wept after acting kissing scene | உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துவிட்டு கால் மணி நேரம் அழுத நடிகை!

http://thatstamil.oneindia.in/img/2010/06/20-aravathuvanam200.jpg
ஹீரோவின் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுத்ததற்காக கால்மணி நேரம் அழுதுவிட்டு, பின்னர் அதே காட்சி சிறப்பாக வந்திருப்பதைப் பார்த்து அரை மணி நேரம் ஆனந்தமாக ஒரு நடிகை சிரித்ததை முன்னெப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா.... இல்லாவிட்டால் இதோ வித்யா!

வித்யா?

ஆம்.. இவர்தான் அந்த ஹீரோயின். புதுமுகம்தான் என்றாலும் பழகிய முகமாக மனதில் பதியும் அளவு இயல்பான இளம்பெண்.

ஆறாவது வனம் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் வித்யா.

கதையில் இப்படி ஒரு காட்சி:

வித்யாவின் தாய்மாமன் போஸ் வெங்கட்டைக் கொல்ல வெறியோடு அவர்களின் கிராமத்துக்கே வருகிறார் ஹீரோ. அதாவது வித்யாவின் காதலன் இவர். அங்கே போஸ் வெங்கட்டும் சற்றுத் தள்ளி வித்யாவும் நிற்கிறார்கள். ஹீரோ அதாவது காதலன் தன்னைத்தான் பார்க்க வந்திருப்பதாக முதலில் தவறாக எண்ணிக் கொள்கிறாள் வித்யா. ஆனால் காதலன் கண்களில் தெரியும் கொலைவெறி, அவனைப் பார்த்து மிரட்சியுடன் நிற்கும் தாய்மாமன் ஆகியோரைப் பார்த்ததும் விஷயம் வித்யாவுக்கு விஷயம் புரிந்து விடுகிறது.

அவளுக்கு காதலன் மேல் உள்ள காதலையும் காட்ட வேண்டும்... தாய்மாமனை காதலனின் கொலைவெறியிலிருந்தும் காக்க வேண்டும்...

என்ன செய்வாள்... சட்டென்று அந்த முடிவுக்கு வருகிறார். யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஓடிப்போய் காதலனின் உதட்டோடு உதடு பதித்து நச் நச்சென்று முத்தம் கொடுக்கிறாள். அந்த முத்தத்தின் இதத்தில் மெல்ல மெல்ல காதலனின் கொலை வெறி அடங்கி, கண்களில் சாந்தம் தவழ்கிறது. தாயமாமனும் தப்பிக்கிறான்.

-இந்தக் காட்சி ஆனை மலைக்கு அருகில் உள்ள டாப் ஸிலிப் பகுதியில் படமானது. கிட்டத்தட்ட 2000 பொதுமக்கள் சூழ்ந்து நிற்க, இந்தக் காட்சி படமாக்கப்பட்டது.

இந்தக் காட்சியில் முதலில் நடிக்க மறுத்து பெரும் ஆர்ப்பாட்டம் செய்தார் ஹீரோயின் வித்யா. புதுமுகம் வேறு. எனவே இயக்குநர் புவனேஷ், ஹீரோயினின் பெற்றோரை நாடி விஷயத்தைச் சொன்னார். அவர்களும் மகளை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தனர்.

ஒருவழியாக சமாதானமாகி முத்தமும் கொடுத்து முடித்த வித்யா, பின்னர் நடந்ததை எண்ணி கதறி கதறி அழுதார். இப்படி முத்தம் கொடுக்க வைத்து விட்டார்களே என கால்மணி நேரம் புலம்பினார். உடனே, அவரை அழைத்த இயக்குநர், காட்சிகளை போட்டுக் காட்டினார். அவற்றைப் பார்த்தபிறகு வித்யாவின் முகத்தில் அரும்பிய புன்னகை, பெரும் சிரிப்பாக மாறியது. கிட்டத்தட்ட அரைமணி நேரம் மனம் விட்டு விட்டுச் சிரித்த வித்யா, தான் தவறாகப் புரிந்து கொண்டதாக இயக்குநரிடம் கூறி சமாதானமானார்.

ஆறாவது வனம் படம் பொள்ளாச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாகியுள்ளது.

மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கு மிகவும் சோதனைக் களமாக அமைந்தது ஆறாவது வனத்தில் அவர்கள் அஞ்ஞாத வாசம் புரிந்த காலகட்டம்தான். அதேபோல காதலில் மிகுந்த சோதனைகளை காதலனும் காதலியும் எதிர்நோக்கும் காலகட்டத்தைச் சித்தரிப்பது இந்த ‘ஆறாவது வனம்’.

ஆறாவது வனத்தின் நாயகனாக பூஷன் நடிக்கிறார். நாயகியாக கேரளாவைச் சேர்ந்த வித்யா அறிமுகமாகிறார்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புவனேஷ். எம்பிஜி பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிப்பவர் எஸ்எம் தியாகராஜன்.

இசையமைப்பாளராக ஹரிபாபு அறிமுகமாகிறார். ஹாலிவுட்டில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சியான் எடிட்டராக அறிமுகமாகிறார். ஏ ஜான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றுகிறார்.

Comments

Most Recent