Nadigarsangam warns Anushka, Genilia | அனுஷ்கா ஜெனிலியாவுக்கு நடிகர் சங்கம் கெடு

http://whatslatest.com/blog/wp-content/uploads/2009/03/genelia-anushka-shetty.jpg
அனுஷ்கா, ஜெனிலியா உள்ளிட்ட வட இந்திய நடிகைகளுக்கு நடிகர் சங்கம் கெடு விதித்துள்ளது. நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாவிட்டால் ஒத்துழைப்பு கொடுக்க மாட்‌டாம் என்று நடிகர் சங்கம் கூறியுள்ளது. தமிழ்சினிமாவுக்குள் நுழைந்து குறுகிய காலத்தில் சம்பாதிக்கும் நடிகைகள் பலர் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் உறுப்பினர் ஆகும்படி வற்புறுத்தி வருகிறது நடிகர் சங்கம். உறுப்பினர் ஆகாத நடிகைகள் உடனடியாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகவேண்டும். அப்படி ஆகவில்லையென்றால், அந்த நடிகைகளுடன் மற்ற நடிகர்-நடிகைகள் இணைந்து நடிக்க மாட்டார்கள் என்று `கிடுக்கிப்பிடி' போட்டு இருக்கிறது.

இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாத நடிகைகளை வைத்து படம் தயாரித்துக்கொண்டிருக்கும் சில பட அதிபர்களுக்கு, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகிய இருவரும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நடிகைகளை உடனடியாக உறுப்பினர் ஆக சொல்லுங்கள். அல்லது அவர்களுக்கான உறுப்பினர் கட்டணத்தை நீங்களே கட்டிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய படங்களில் நடித்த ஜெனிலியா, இப்போது தனுஷ் ஜோடியாக `உத்தமபுத்திரன்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர், நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல், நீண்டகாலமாக சாக்குப்போக்கு சொல்லி வந்தார். நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர், நேற்று ஜெனிலியா நடித்துக்கொண்டிருந்த `உத்தமபுத்திரன்' படப்பிடிப்புக்கு திடீர் என்று சென்றார்கள். நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாததால், ஜெனிலியா இந்த படத்தில் நடிக்கக்கூடாது. அவருடன் சக நடிகர்-நடிகைகள் யாரும் நடிக்க மாட்டார்கள் என்று கூறி, படப்பிடிப்பை நிறுத்தினார்கள். உடனே ஜெனிலியா நடிகர் சங்க நிர்வாகிகளிடம் சமாதானத்துக்கு வந்தார். உடனடியாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிடுவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில், நடிகர் சங்க நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள்.

இதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாத நடிகைகள் அனுஷ்கா, சமீராரெட்டி, திவ்யாஸ் பந்தனாஸ் (குத்து ரம்யா), காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி ஆகியோருக்கும் நடிகர் சங்கம் கெடு விதித்து கடிதம் அனுப்பி இருக்கிறது. `தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகாவிட்டால், உங்களுடன் மற்ற நடிகர் - நடிகைகள் நடிக்க மாட்டார்கள்' என்ற எச்சரிக்கையுடன் அந்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறதாம்!

Comments

Most Recent