நடிகர் வடிவேலுவின் மோசடி புகார் சிங்கமுத்து மீது 50பக்க குற்றபத்திரிகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் வடிவேலு கொடுத்த புகார் மீது, நடிகர் சிங்கமுத்து மீது 50 பக்க குற்றபத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர்.சென்னை அருகே நிலம் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக நடிகர் சிங்கமுத்து மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடிகர் வடிவேலு புகார் செய்தார். இந்தப் புகார் மீது துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் மோகன்ராஜ், எஸ்.ஐ. மைனர்சாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிங்கமுத்துவை தேடி வந்தனர்.
இந்த தகவல் வெளியானதும் சிங்கமுத்து தலைமறைவானார். பின் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார். நீதிமன்ற நிபந்தனைப்படி போலீஸ் முன்பு ஆஜரானார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் 20க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணைக்கு பிறகு, தனிப்படை போலீசார் நடிகர் சிங்கமுத்து மீது 50 பக்க குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது நடிகர்கள் வடிவேலு, சிங்கமுத்து ஆகிய 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Most Recent