கவுதம் மேனன் படத்தை தபு மறுத்தது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் தபு நடித்தபோது, அதில் உதவி இயக்குனராக இருந்தவர் கவுதம் மேனன். அப்போதே தான் இயக்கும் படத்தில் நடிக்குமாறு கவுதம் கேட்டிருந்தாராம். கண்டிப்பாக நடிப்பேன் என தபுவும் கூறி இருந்தார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் ஜோதிகா நடித்த கேரக்டரை முதலில் ஏற்க இருந்தவர் தபு. ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவர் நடிக்கவில்லை. தபுவின்
நடிப்புக்கு கவுதம் தீவிர ரசிகராம். அதனால் இப்போது இயக்கி வரும் த்ரில்லர் படத்தில் நடிக்குமாறு தபுவை கேட்டிருந்தார். அவரும் சம்மதம் தெரிவித்தார். இதில் கவுதமின் உதவியாளர் வீரா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி சமீரா ரெட்டி. படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இதில் தபு நடிப்பது உறுதி.
அவரது கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறோம் என கவுதம் கூறியிருந்தார். இப்போது திடீரென இப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார் தபு. இதற்கான காரணம் சமீரா ரெட்டி என கூறப்படுகிறது. படத்தின் கதையை படிக்க தருமாறு முன்கூட்டியே தபு கேட்டிருந்தாராம். ஆனால் கதையை போனில் மட்டும்
கவுதம் கூறியதாகவும் அது அவருக்கு படிக்க தரவில்லை என்றும் தெரிகிறது. மேலும் படத்தில் சமீராதான் ஹீரோயின். தபுவுக¢கு சிறு வேடம்தான். இதை அறிந்ததும் அவர் படத்திலிருந்து விலகிக்கொண்டாராம். தபுவுக்கு கவுரவ வேடம்தான். ஆனால் படத்தின் கதையே அந்த வேடத்தை சுற்றித்தான். அவர் நடிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என சொல்கிறது பட வட்டாரம்.

Comments

Most Recent