நடிகை சரிதா விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு

http://cinesouth.com/images/new/17032007-THN11image2.jpg
நடிகை சரிதா விவாகரத்து வழக்கு செப்டம்பர் 21ம்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. தண்ணீர் தண்ணீர், தப்புத் தாளங்கள், மவுனகீதம் உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை சரிதா. இவருக்கும், கேரள நடிகர் முகேஷுக்கும் 1987ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கேட்டு, சென்னை குடும்ப நல கோர்ட்டில் சரிதா மனு தாக்கல் செய்தார்.

இந்தப் பிரச்னை சமரச மையத்துக்கு சென்றது. அங்கு விசாரணை நடந்தது. இருதரப்பிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து, பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல கோர்ட்டில், நடிகை சரிதாவும், நடிகர் முகேஷும் மனு தாக்கல் செய்தனர். ஆறு மாதங்களுக்கு பின், இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது.குடும்ப நல கோர்ட் நீதிபதி ராமலிங்கம் முன் சரிதாவும், முகேஷும் ஆஜராகினர். இருவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். பின், நீதிபதி ராமலிங்கம் விசாரணையை வரும் செப்டம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Comments

Most Recent