நடிகை அசின் சமீபகாலமாகவே பரபரப்பு செய்திகளில் அடிபடுகிறார். இலங்கைக்கு சென்ற விஷயம் விவகாரமாகி, தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்ப்புக் கிளம...
நடிகை அசின் சமீபகாலமாகவே பரபரப்பு செய்திகளில் அடிபடுகிறார். இலங்கைக்கு சென்ற விஷயம் விவகாரமாகி, தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்ப்புக் கிளம்பியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அசினைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார் டைரக்டர் பிரியதர்ஷன். 'லேசா லேசா' படம் மூலம் த்ரிஷாவை தமிழில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தியவர் டைரக்டர் ப்ரியதர்ஷன். அவர் இயக்கிய 'காஞ்சிவரம்' படம் தேசிய விருது பெற்றது. தற்போது, 'கட்டா மிட்டா' என்ற இந்திப் படத்தை அவர் இயக்கி உள்ளார். இப்படம் மூலம் இந்தி திரையுலகுக்கு த்ரிஷாவை ஹீரோயினாக அறிமுகம் செய்துள்ளார்.
இந்தப் படம் பற்றி நேற்று அவர் அளித்த பேட்டியின்போது அசினை வம்புக்கு இழுத்து விமர்சித்தார். அதன் விவரம் வருமாறு: எனது மிகச் சிறந்த படமாக 'கட்டா மிட்டா' படத்தை கருதுகிறேன். 1989ல் மோகன்லால் & ஷோபனா நடிக்க, நான் இயக்கிய 'வெல்லானகுல்டே நாடு' என்ற நகைச்சுவை கதையின் கருவை கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கும் அக்ஷய்குமார்தான், படத்தின் தயாரிப்பாளர். தனக்கு ஜோடியாக தென்னிந்திய நடிகையான த்ரிஷாவை அவரே விரும்பி தேர்வு செய்தார்.'இந்தி படத்தில் அசின் அறிமுகமானபோது அவருக்கு மீடியாவும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் கொடுத்தது. த்ரிஷாவுக்கு அத்தகைய விளம்பரம் கிடைக்காதது ஏன்?' என்று என்னிடம் கேட்கிறார்கள். முன்னணி நடிகராக திகழும் ஆமிர்கானுக்குதான் அசின் கால்ஷீட் கொடுத்தார். அசின் ஒரு விளம்பரப் பிரியை. அவரது கவனம் முழுவதும் அவரை விளம்பரப்படுத்திக் கொள்வதில் இருந்தது. அதற்காக ஆமீர்கானுடன் ஜோடி சேர்ந்து எல்லா விளம்பர நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். த்ரிஷா என்னுடைய வளர்ப்பு. அவருக்கு அப்படியொரு விளம்பரம் கிடைக்கவில்லை.
'கட்டா மிட்டா' வெளியாகும் இந்தநேரத்தில் இப்படத்தை விளம்பரப்படுத்த அக்ஷய்குமார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரும் கலந்து கொண்டிருக்க வேண்டும். மும்பையில் தங்கி இருக்க வேண்டிய இந்தநேரத்தில் அவர் தமிழ்படம் ஒன்றுக்காக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுவிட்டார். பாலிவுட் படங்களை பொறுத்தவரை மார்க்கெட் பிடிப்பது என்பது விளம்பரம் மற்றும் ஊக்குவிப்பதிலுமே இருக்கிறது.
இவ்வாறு ப்ரியதர்ஷன் கூறினார்.
Comments
Post a Comment