கையேந்தி பவனில் டீ குடிக்கும் சமீரா

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1360.jpg
ரோடு ஓரத்தில் இருக்கும் கையேந்தி பவன்களில் நடிகைகள் சாப்பிடுக¤றார்கள். இப்படியொரு காட்சி சினிமாவில்தான் பார்க்க முடியும். ஆனால் இப்படியொரு சம்பவம் அவ்வப்போது நிஜத்தில் நடக்கிறது. வாரணம் ஆயிரம், அசல் படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. சாலைகளில் ஷூட்டிங் நடப்பதாக இருந்தால் சமீரா துள்ளி குதிப்பார். காரணம், ரோட்டோர கடைகளில் டீ குடிப்பதென்றால் அவருக்கு அவ்வளவு இஷ்டம். 'நடிக்க வரும் முன் மும்பையில் படித்த கல்லூரி நாட்களை மறக்க முடியாது. தோழிகளுடன் கையேந்திபவன் சென்று டீ, டிபன் சாப்பிட்ட அனுபவத்தை வாழ்நாளில் மறக்கவே முடியாது. அப்போது என¢னுடன் பழகிய தோழிகளுடன் இப்போதும் நட்பு தொடருகிறது. பழைய நட்பை தொடரும் நான், பழைய கையேந்தி பவன் பழக்கத்தை மட்டும் ஏன் கைவிட வேண்டும்Õ என கேட்கிறார் சமீரா.

Comments

Most Recent