மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீரா வாசுதேவனுக்கு நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. 'உன்னை சரணடைந்தேன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மீரா வாசுதேவன். ஜெர்ரி, கத்தி கப்பல். அறிவுமணி உட்பட பல படங்களில் நடித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் மகன் விஷால் அகர்வாலுக்கும் அவருக்கும் காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2005&ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
சில ஆண்டுகளே நீடித்த இவர்களது இல்வாழ்க்கை கருத்து வேறுபாட்டால் கசந்தது. கடந்த 2008&ம் ஆண்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார் மீரா. தன் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மனு கொடுத்தார் விஷால். கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு நேற்று முடிவுக்கு வந்தது.
பலமுறை இருவரையும் சந்தித்து பேச வைத்து சமாதானப்படுத்த குடும்ப நல நீதிமன்றம் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இருவரும் பிரிய சம்மதம் தெரிவித்தனர். அதன் பேரில் தலைமை நீதிபதி டி.ராமலிங்கம் விவாகரத்து வழங்கி நேற்று தீர்ப்பளித்தார். 'ஜீவனாம்சம் எதிர்பார்க்கிறார்களா?' என்று நீதிபதி கேட்டதற்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார் மீரா வாசுதேவன். நேற்று ஒரு நாள் மட்டும் குடும்ப நல கோர்ட்டுகளில் 37 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, அதில் 15 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Comments

Most Recent