கமல்ஹாசன் வலையில் சிக்கிய த்ரிஷா அம்மா!

http://thatstamil.oneindia.in/img/2010/07/06-trisha-mother200.jpg
கமலஹாசன் நடிக்கும் மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் நடிக்கிறார். இதன் மூலம் அவரும் நடிகையாகிறார்.

அழகான தாய்க்குலங்களைக் கொண்டுள்ள நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.

உமா தான் த்ரிஷாவின் கால்ஷீட் விஷயங்களை பார்த்துக் கொள்கிறார். மேலும், த்ரிஷாவுடன் வெளியூர் படப்பிடிப்புக்கும் செல்கிறார். அழகாக இருக்கும் அவரை ஏற்கனவே நிறைய பேர் நடிக்க அழைத்துள்ளனர். ஆனால், அவர் மறுத்து விட்டார்.

அன்மையில் சென்னை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் மன்மதன் அம்பு பட துவக்க விழா நடந்தது. அதற்கு த்ரிஷாவுடன் உமாவும் வந்திருந்தார். அப்போது மகள் மட்டுமல்லாமல் அம்மாவும் விழாவுக்கு வந்தவர்களை கவர்ந்தார்.

இந்த நிலையில், மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷா அம்மாவுக்கு ஏற்ற கதாபாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவரை நடிக்குமாறு கே.எஸ்.ரவிக்குமார் கேட்டபோது மறுத்த உமா கமல் வற்புறுத்தியதும் ஒத்துக் கொண்டார்.

இந்த படத்தில் கமல் ஜோடியாக நடிக்க நயன்தாரா, த்ரிஷா இடையே கடும் போட்டி நிலவியது. மர்மயோகி படத்தில் த்ரிஷாவை நடிக்க வைப்பதாக கமல் உறுதி அளித்து இருந்தார். ஆனால், அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் மன்மதன் அம்பு படத்தில் த்ரிஷாவை தேர்வு செய்தார். இதனால் தான் கமல் வற்புறுத்தியதும் உமா நடிக்க ஒப்புக்கொண்டார்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. உமா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கேயே படமாக்கப்பட உள்ளது. உமாவின் கதாபாத்திரம் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ பேர் நடிப்பு அம்பை உமாவை நோக்கி வீசியும் அவர் படியவில்லை. கடைசியில் மன்மதன் அம்பு வந்துதான் உமாவை நடிப்புக் களத்திற்குக் கொண்டு வந்துள்ளது!

Comments

Most Recent