அருவியில் விழுந்தார் விதிஷா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'காத்தவராயன்' படத்தில் நடித்தவர் விதிஷா. சலங்கை துரை இயக்கும் 'காண்டீபன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அருவியில் குளித்தபடி விதிஷா பாடும் காட்சி சமீபத்தில் படமானது. அப்போது கால் தவறி அருவியில் விழுந்த விதிஷாவை படக்குழுவினர் காப்பாற்றியுள்ளனர்.
இது பற்றி சலங்கை துரை கூறியதாவது:
கேரளாவில் சபரிமலைபோகும் வழியில் உள்ள அருவியில் ஷூட்டிங் நடந்தது. இடுக்குகள் நிறைந்த ஆழமான பள்ளம் நிறைந்த அருவி அது. பாடல் காட்சிக்காக அந்த அருவியில் குளிப்பதுபோல் விதிஷா நடித்தார். அப்போதே பாதுகாப்புக்கு 5 பேரை நியமித்து இருந்தோம். எதிர்பாராத விதமாக கால் தவறி விதிஷா அருவியில் விழுந்தார். உடனே மீட்பு குழுவினர் அவரை காப்பாற்றினர். நடுங்கிப்போன விதிஷா பயத்தில் அழத் தொடங்கிவிட்டார். மீண்டும் அக்காட்சியில் நடிக்க பயந்தார். 2 மணிநேரம் ஓய்வு கொடுத்து, மீண்டும் அக்காட்சியை படமாக்கினேன். வெறும் 5 நிமிட காட்சிதான் அது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது.

Comments

Most Recent