இத்தாலியில் கமல் பட ஷூட்டிங் :பிரமாண்ட கப்பலில் த்ரிஷா திடீர் மாயம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இத்தாலியில் பிரமாண்ட கப்பல் ஒன்றில் நடந்து கொண்டிருந்த கமல் பட ஷூட்டிங்கின்போது, த்ரிஷா மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேர தேடுதலுக்குப் பிறகு கப்பல் பாதுகாவலர்கள் த்ரிஷாவை பத்திரமாக மீட்டனர். கமல்ஹாசன், மாதவன், த்ரிஷா நடிக்கும் படம் 'மன்மதன் அம்பு'. கே.எஸ்.ரவிகுமார் டைரக்ட் செய்கிறார். படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடந்த 2 வாரமாக நடந்து வருகிறது. தற்போது இத்தாலியில் படப்பிடிப்பு நடக்கிறது. கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் நடிக்கும் காட்சிகள் அங்குள்ள பிரமாண்ட கப்பலில் படமாகி வருகிறது.
'டைட்டானிக்' போன்ற பிரமாண்ட பயணிகள் கப்பலான இதில் பல்லாயிரக்கணக்கானோர் பயணம் செய்கின்றனர். கப்பல் மொத்தம் 18 அடுக்குகள் கொண்டது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எலிவேட்டர், லிப்ட் வசதிகள் உள்ளன. நடுக்கடலில் கப்பல் செல்லும்போது காட்சிகள் படமாக்கப்படுகின்றன. கப்பலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படக்குழுவினரிடம் வரைபடம் (மேப்) தரப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஒரு இடத்தில் கமல், த்ரிஷா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டு, பின்னர் லொகேஷன் மாற்றப்பட்டது. படக் குழுவினர் இடம் மாறினர். த்ரிஷாவுடன் அவரது அம்மா உமாவும் ஸ்பாட்டில் இருந்திருக்கிறார். இருவரும் படக் குழுவினரை பின்தொடர்ந்து சென்றனர். அப்போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலில் திடீரென்று த்ரிஷாவை தவறவிட்ட அவரது அம்மா சுற்றும்முற்றும் தேடினார். த்ரிஷா வழிதவறி வேறுபக்கம் சென்றுவிட்டது தெரியவந்தது. பட குழுவினருக்கும் பாதுகாவலர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அனைத்து அடுக்குகளுக்கும் ஆட்கள் அனுப்பப்பட்டனர். இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பிறகே த்ரிஷாவை கண்டுபிடிக்க முடிந்தது. ஏதோ ஒரு இடத்தில் ஷாப்பிங்கில் த்ரிஷா மூழ்கியது தெரிந்தது. அதன்பிறகே படக் குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இத்தாலியிலிருந்து நேற்று சென்னை திரும்பிய த்ரிஷாவின் அம்மா, இந்த தகவலை நமது நிருபரிடம் தெரிவித்தார். அவர் கூறும்போது, "டைட்டானிக் படத்தில் வருவதுபோல பிரமாண்ட கப்பலில் 'மன்மதன் அம்பு' படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சாதாரண பயணிகளும் உண்டு, கோடீஸ்வர பயணிகளும் இருக்கிறார்கள். ஐந்து நட்சத்திர ஓட்டல்கள்போல் 5 ஓட்டல்கள் இதில் உள்ளன. ஒரு முனையிலிருந்து மற்றொரு முனையை அடைய நீண்ட தூரம் செல்ல வேண்டும். கூட்டத்தில் த்ரிஷாவும், நானும் பிரிந்து சென்றுவிட்டோம். செல்போன்கூட வேலை செய்யவில்லை. மகள் மாயமானதில் கொஞ்சம் பயந்து விட்டேன். படக் குழுவினரும், பாதுகாவலர்களும் நீண்ட நேரம் தேடி த்ரிஷாவை அழைத்து வந்தனர். அதன் பிறகுதான் நிம்மதி அடைந்தேன். இதுபோல் 2 முறை நடந்துவிட்டது. அதன்பிறகு எங்கு சென்றாலும் பட குழுவினருடனே சென்றோம். இன்னும் ஒரு மாதம் அங்கு ஷூட்டிங் நடக்கிறது" என்றார்.

Comments

Most Recent