காவலர் குடியிருப்பு தலைப்புக்கு எதிர்ப்பா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

குப்பி படத்தை இயக்கியவர் ஏ.எம்.ஆர். ரமேஷ். அவர் இயக்கியுள்ள படம் காவலர் குடியிருப்பு. இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இந்நிலையில் திடீரென படத்தின் தலைப்பை காதலர் குடியிருப்பு என மாற்றியுள்ளனர். இது பற்றி ரமேஷ் கூறியதாவது:காவலர் குடியிருப்பு தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதால் தலைப்பை மாற்றியதாக சொல்வதில் உண்மை இல்லை. இந்த படம் இளம் காதலர்களை பற்றியது.
பாபர் மசூதி இடிப்புக்கு பின் பெங்களூரில் கலவரம் நடந்தது. அப்போது கதை நடப்பதாக வரும். மற்றபடி படத்தில் அரசியல் இல்லை. காவலர் குடியிருப்பு என்ற தலைப்பு இருந்தாலும், போலீஸ் துறையை பற்றியும் எதுவும் கூறவில்லை. இந்த தலைப்பு வைத்தால் அரசியல் படமாக தெரிகிறது என சிலர் கருத்து தெரிவித்தனர். இது முழுக்க காதல் கதை படம் என்பதால் தலைப்பை மாற்றினேன். புதுமுகங்கள் அனீஸ் தேஜஸ்வர், ஸ்ருதி நடித்துள்ளனர். அடுத்த மாதம் ரிலீசாகிறது.

Comments

Most Recent