கஸ்தூரியை தொட முயன்ற ரசிகர்களால் பரபரப்பு

 http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-1361.jpg
பிரதீப், ஹரிகா நடிக்கும் படம் தேரோடும் வீதியிலே. சரோ ஸ்ரீராம் இயக்குகிறார். இதில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார் கஸ்தூரி. இந்த பாடலுக்கான ஷூட்டிங் ஈரோடு அருகே நடந்தது. கஸ்தூரி நடனம் ஆடுவது போலவும் பொதுமக்கள் அதை பார்ப்பது போலவும் சரோ ஸ்ரீராம் படமாக்கினார். இந்த காட்சியில் அந்த ஊர் மக்களே பார்ப்பது போல காட்சியை எடுத்தனர். இந்த பாடலில் கஸ்தூரி கவர்ச்சி உடையில் இருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள், முண்டியடித்து முன்னே வந்தனர். கஸ்தூரியை தொடவும் முயன்றனர். உடனே யூனிட்டார் அவர்களை தடுத்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற¢பட்டது. உடனே டைரக்டர் கட் சொல்ல, கஸ்தூரி அங்கிருந்து கேரவனுக்கு சென்றுவிட்டார். இது பற்றி இயக்குனர் சரோ ஸ்ரீராம் கூறும்போது, ஊர் மக்கள் அனைவரும் ஷூட்டிங்கிற்கு முழு ஒத்துழைப்பு தந்தனர். சம்பந்தமே இல்லாமல் யாரோ கூட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றனர். அவர்கள்தான் இப்படி நடந்துகொண்டனர். போலீசுக்கு தகவல் தெரிவிப்போம் என கூறியதும் அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர் என்றார்.

Comments

Most Recent